/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குளத்தில் மீன் இறந்து மிதந்ததால் துர்நாற்றம்
/
குளத்தில் மீன் இறந்து மிதந்ததால் துர்நாற்றம்
ADDED : செப் 15, 2024 07:04 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே குளத்தில் மீன்கள் இறந்து மிதந்ததால் துர்நாற்றம் வீசியது.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரே கரையான் குளம் உள்ளது. சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த குட்டையில் பல ஆண்டுகளாக தேங்கி நிற்கிறது. பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி முயற்சியால் தற்போது கழிவுநீர் செல்ல வேறு வழி ஏற்படுத்தியுள்ளனர். இதனால் குளத்தில் தேங்கியிருந்த கழிவுநீரை மோட்டார் மூலம் அகற்றும் பணி நடக்கிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் வசிக்கும் மக்கள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில் மீன்கள் அகற்றப்பட்டு, துர்நாற்றம் வீசாமல் இருக்க மருத்து தெளிக்கப்பட்டு வருகிறது.