ADDED : ஜூலை 03, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், துவக்கப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (சேகர்) தலைமை தாங்கினார். அதில், 42 பணியிடங்களுக்கு விருத்தாசலம், மங்களூர், நல்லுார், ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, கம்மாபுரம், புவனகிரி ஒன்றியங்களை சேர்ந்த 67 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.