/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் பொருட்கள் வழங்க தாமதம் சேத்தியாத்தோப்பு அருகே சாலை மறியல்
/
ரேஷன் பொருட்கள் வழங்க தாமதம் சேத்தியாத்தோப்பு அருகே சாலை மறியல்
ரேஷன் பொருட்கள் வழங்க தாமதம் சேத்தியாத்தோப்பு அருகே சாலை மறியல்
ரேஷன் பொருட்கள் வழங்க தாமதம் சேத்தியாத்தோப்பு அருகே சாலை மறியல்
ADDED : ஆக 11, 2024 05:11 AM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அருகே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க தாமதமானதால், கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது.
எறும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சிக்கன கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடை மூலம் அவர்களுக்கு அரிசி், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று கடை திறந்தும், பொருட்கள் உடனடியாக வழங்காமல், கடை விற்பனையாளர், நீண்ட நேரம் பொதுமக்களை காக்க வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாலை 3:00 மணியளவில் விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையில், எறும்பூரில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து, பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதையடுத்து, 3:45 மணியளவில் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.