/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் கெடிலம் ஆற்றில் இரும்பு பாலம் இடித்து அகற்றம்
/
கடலுார் கெடிலம் ஆற்றில் இரும்பு பாலம் இடித்து அகற்றம்
கடலுார் கெடிலம் ஆற்றில் இரும்பு பாலம் இடித்து அகற்றம்
கடலுார் கெடிலம் ஆற்றில் இரும்பு பாலம் இடித்து அகற்றம்
ADDED : ஜூலை 10, 2024 04:28 AM

கடலுார், : கடலுார் கெடிலம் ஆற்றில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்காக, ஆங்கிலேயர் கால இரும்பு பாலம் இடிக்கும் பணி துவங்கியது.
கடலுார் கெடிலம் ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மூலம் கடலுார் வழியாக, புதுச்சேரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து இருந்து வந்தது. நுாறு ஆண்டுகள் பழமையான இந்த பாலம் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், இரும்பு பாலத்திற்கு அருகில் புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு, வாகன போக்குவரத்து சென்று வருகிறது.
இந்நிலையில், கெடிலம் ஆற்றின் குறுக்கே பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்த இடத்தில் புதிய பாலம் கட்டும் பணியை, 22.15 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு ராட்சத துாண்கள் அமைக்க மண் பரிசோதனை செய்யும் பணி நடந்தது. இதை தொடர்ந்து, தற்போது பழைய இரும்பு மேம்பாலத்தை ஹிட்டாச் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.