ADDED : ஜூலை 25, 2026 11:03 PM

பண்ருட்டி: துாய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு நலத்திட்ட முகாம் நடந்தது.
பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு நகராட்சி கமிஷ்னர் காஞ்சனா முன்னிலை வகித்தார். நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் முகாமினை துவக்கி வைத்து பேசினார். இதில் 65 துப்புரவு நிரந்தர பணியாளர்கள், 100 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் துாய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக பாதுகாப்பு வாழ்வாதாரம் திறன் மேம்பாட்டு நலத்திட்ட உதவி, பல்வேறு துறைகள் அடங்கிய நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், கணக்காளர் சரவணகுமார், தி.மு.க., மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நகர அவை தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், நகர துணை செயலாளர் கவுரிஅன்பழகன், கவுன்சிலர்கள் ராமதாஸ், வெங்கடேசன் , ஜரின்னசா,சபீர், கிருஷ்ணராஜ், கார்த்தி வசந்தி ரமேஷ், லாவண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
