/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி திட்டப்பணிகள்: வேப்பூரில் கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்டப்பணிகள்: வேப்பூரில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 11, 2024 04:58 AM

வேப்பூர் : வேப்பூர் பகுதியில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
வேப்பூர் அடுத்த பூலாம்பாடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகள், மக்கும் மக்கா குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம், அரசு துவக்கபள்ளியில் கழிவறை கட்டுமான பணி, வரம்பனுார் -காளியமேடு இணைப்பு தார்சாலை, கலைஞர் வீடு கட்டுமானப் பணிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கிறது.
இதனை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, திட்டப்பணிகளின் வரையறை, காலம், செலவினம், பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், கலைஞர் வீடு ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணி துவங்காத பயனாளியிடம் விசாரணை செய்தார்.
அப்போது, வேப்பூர் தாசில்தார் மணிகண்டன், மங்களூர் பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, முருகன், ஊராட்சி தலைவர் நாராயணசாமி, பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.பின்னர், நல்லுார் ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது.