/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிலரங்கம்
/
தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிலரங்கம்
ADDED : செப் 15, 2024 07:02 AM

கடலுார்: பண்ருட்டியில் தொழில் முனைவோருக்கான ஏற்றுமதி மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
புதுச்சேரி ஏற்றுமதி மேம்பாட்டு மையம் மற்றும் டி.என் அப்பெக்ஸ் சார்பாக ஏற்றுமதி மேம்பாட்டு பயிற்சி பயிலரங்கம் பண்ருட்டியில் நடந்தது. ஏற்றுமதி மேம்பாட்டு மைய புதுச்சேரி தலைவர் பவானி மசாலா ஜெய்சங்கர் வரவேற்றார், டி.என். அபெக்ஸ் துணைத் தலைவர் வசந்தி சிறப்புரையாற்றினார்.
ஏற்றுமதி முக்கியத்துவம் குறித்து ஏற்றுமதி மேம்பாட்டு மைய தலைவர் திருப்பதிராஜன் பேசினார். அப்பேடா செயல்பாடுகள் குறித்து துணை மேலாளர் முத்தையா பேசினார்.மாவட்ட தொழில் மைய செயல்பாடுகள் மற்றும் ஏற்றுமதிக்கான சலுகைகள் பற்றி மனோகரன், விருத்தாசலம் கே.வி.கே. டாக்டர் கண்ணன், முந்திரி மற்றும் வேர்க்கடலை மதிப்பு கூட்டல் பொருள்கள் குறித்தும், ஏற்றுமதியில் உள்ள வாய்ப்புகள் பற்றி கருப்பண்செட்டி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் முந்திரி ஏற்றுமதி சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், செல்வமணி, பாரதிதாசன். மணிலா சங்க நிர்வாகிகள் மனோகரன், ராஜேந்திரன், ஏழுமலை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மைய உறுப்பினர்கள், இளம் தொழில் முனைவோர் மைய உறுப்பினர்கள், கடலுார் மற்றும் சுற்றியுள்ள தொழில் முனைவோர் பங்கேற்றனர்.டி.என்.அபெக்ஸ் பிரவீன் நன்றி கூறினார்.