/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிப்பிரியர்கள் அட்டூழியம் பக்தர்கள் கடும் அவதி
/
குடிப்பிரியர்கள் அட்டூழியம் பக்தர்கள் கடும் அவதி
ADDED : ஆக 07, 2024 06:37 AM

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடைக்கு பார் அனுமதி கிடையாது. ஆனால், நடமாடும் பாராக பல கடைகள் இயங்கி வருகிறது.
இதனால் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிப்பிரியரகள் சரக்கு பாட்டில்களை வாங்கிக்கொண்டு அப்பகுதியில் உள்ள பெரியாண்டவர் கோவில், பாதாளகாளி கோவில், விளை நிலங்கள்,பொதுமக்கள் நடந்து செல்லும் வழிகளில் உட்கார்ந்து குடித்து வருகின்றனர்.
இதனால் ஒரு கிலோமீட்டர் துாரத்திற்கு பிளாஸ்டிக் கப், பாட்டில்கள் சாலையிலும், கோவில் அருகிலும் குவிந்து கிடக்கிறது.
மேலும், குடிப்பிரியர்கள் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்வதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
எனவே, பொதுஇடத்தில் குடிக்கும் குடிப்பிரியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.