தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எல்லை காளி கோவில் செடல் பக்தர்கள் தரிசனம் 

எல்லை காளி கோவில் செடல் பக்தர்கள் தரிசனம் 

எல்லை காளி கோவில் செடல் பக்தர்கள் தரிசனம் 


ADDED : ஜூலை 24, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார், பழைய வண்டிப்பாளையம் எல்லை காளியம்மன் கோவிலில் செடல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலுார், பழைய வண்டிப்பாளையம் எல்லை காளியம்மன் கோவிலில் 126 ஆண்டு செடல் உற்சவத்தை முன்னிட்டு கடந்த 22ம் தேதி மகா கணபதி ேஹாமம், கலச பூஜை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகா சங்கல்பம், மண்டலாபிஷேக பூர்த்தி ேஹாமம், 108 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் 25வது ஆண்டு அரசு–வேம்பு திருக்கல்யாணம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை ஊத்துக்காட்டு மாரியம்மன் பெண்ணையாற்று கரகங்களுடன் வீதியுலா, மதியம் 1,008 குடநீர் மகா அபிஷேகம், மாலை செடல் உற்சவம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  கோண்டூர் ஓம்சக்தி நகர் புத்து நாகவல்லி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி நேற்று கரகம் வீதியுலா, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சாகை வார்த்தல் நடந்தது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us