/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா
/
ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா
ADDED : ஆக 21, 2024 07:31 AM

கடலுார் : கடலுார் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் கேப்பர் மலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட சிறப்பு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் ஆறுமுகம், தனசேகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தேசிங்கு துவக்கவுரையாற்றினார்.
இதில், ஒப்பந்த ஊழியர்களை காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடத்தில் நியமிக்க வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் முதல்வர் கூறிய, பத்து ஆண்டுகளுக்குமேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, துணைத் தலைவர்கள் பன்னீர்செல்வம், தமிழ்வாணன், சிவராமன், செந்தில்குமார், இணை செயலாளர்கள் கோவிந்தராசு, ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநில துணை பொதுச்செயலாளர் பழனிவேல் நிறைவுரையாற்றினார்.

