/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் எம்.பி., ஆய்வு
/
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் எம்.பி., ஆய்வு
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் எம்.பி., ஆய்வு
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் எம்.பி., ஆய்வு
ADDED : ஜன 02, 2025 08:31 PM

பெண்ணாடம்; பெண்ணாடம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் - திருச்சி ரயில் மார்க்கத்தில், பெண்ணாடம் ரயில் நிலையம் வழியாக விழுப்புரம் - மதுரை; திருப்பாதிரிபுலியூர் - திருச்சி பாசஞ்சர் ரயில்களும், சென்னை - குருவாயூர்; குருவாயூர் - சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இங்கு நின்று செல்கின்றன.
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ராக்போர்ட், பல்லவன், வைகை மற்றும் வாராந்திர ரயில்கள் அனந்தபுரி, கன்னியாகுமரி, கவுரா, நிஜாமுதீன் உட்பட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல மா.கம்யூ., சார்பில் கோரிக்கை விடுத்தும், ரயில் மறியல் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை.
இக்கோரிக்கைகள் தொடர்பாக, திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் நேற்று பகல் 1:10 மணியளவில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, திருச்சி ரயில்வே கோட்ட வணிக பிரிவு மேலாளர் மோகன பிரியாவிடம், ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரயில்கள் நின்று செல்ல பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதற்கு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஆய்வின்போது திருச்சி கோட்ட உதவி பொறியாளர் கார்த்திக் ராஜா, லால்குடி சீனியர் செக் ஷன் இன்ஜினியர் பிரேம், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன், ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் ராயூடு, மா.கம்யூ., ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் மாதவன் உடனிருந்தனர்.