/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளி தம்பதி தீக்குளிக்க முயற்சி
/
மாற்றுத்திறனாளி தம்பதி தீக்குளிக்க முயற்சி
ADDED : மார் 04, 2025 07:04 AM

கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் வண்டிக்கேட் சபீர் நகரைச் சேர்ந்தவர் ரவி 50; இவரது மனைவி திலகம். இருவரும் மாற்றுத்திறனாளிகள்.
ரவியின் சகோதரிகள் வீரம்மாள், சந்திரா இருவரும், தான செட்டில்மெண்டாக கொடுத்த சொத்தை, தங்களது பெயரில் மாற்றி அதில் பாதியை விற்பனை செய்து விட்டதாகவும், அது தொடர்பாக ரவி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
குறைகேட்பு கூட்டத்தில் தனது சகோதரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுவுடன் வந்த ரவி, திலகம் இருவரும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து இருவரையும் கலெக்டரிடம் அனுப்பி வைத்தனர். தங்களது சொத்தை மீட்டு தர மனு அளித்தனர். இச்சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.