ADDED : ஜூன் 08, 2024 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : குறுவை சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களில் மஞ்சள் நிற நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெண்ணாடம் மற்றும் திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, இறையூர், பெ.கொல்லத்தங்குறிச்சி, மாளிகைக்கோட்டம், அரியராவி உள்ளிட்ட கிராம விவசாயிகள் 200 ஏக்கருக்கு மேல் குறுவை நெல் நடவு செய்துள்ளனர். அதில், பெண்ணாடம், பெ.கொல்லத்தங்குறிச்சி பகுதியில் உள்ள நெற்பயிரில் மஞ்சள் நிற நோய் பாதிப்பு ஏற்பட்டு, சோலைகள் கருகி வருகின்றன. இதனால் மகசூல் பாதிக்குமென குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.