UPDATED : மார் 22, 2024 12:29 PM
ADDED : மார் 22, 2024 12:29 AM

கடலுார்: கடலுார் சூரப்பன்நாயக்கன் சாவடி மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில், மாவட்ட குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தனர். இதில், என்.எல்.சி., நிறுவனத்தின் 7 சதவீத பங்கு விற்பனை நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 18ம் தேதி நெய்வேலியில் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தராத காவல் துறையை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மருதவாணன், உதயகுமார், கருப்பையன், ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

