/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிரான்ஸ்பர் 'கிடைக்கலையாம்' புலம்பும் மாவட்ட போலீசார்
/
டிரான்ஸ்பர் 'கிடைக்கலையாம்' புலம்பும் மாவட்ட போலீசார்
டிரான்ஸ்பர் 'கிடைக்கலையாம்' புலம்பும் மாவட்ட போலீசார்
டிரான்ஸ்பர் 'கிடைக்கலையாம்' புலம்பும் மாவட்ட போலீசார்
ADDED : ஜூலை 17, 2024 12:47 AM
மாவட்டத்தில், கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய ஏழு காவல் உட்கோட்டங்கள், 46 போலீஸ் ஸ்டேஷன், 6 அனைத்து மகளிர் காவல் நிலையம், 4 போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன், 4 மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், போலீசார் தங்கள் பணிபுரியும் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது வழக்கம்.
அதன்பின், மூன்று ஆண்டுகளுக்கு பின் வேறு ஸ்டேஷனுக்கு மாறுதல் பெற்று சென்றால், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பர்.
தற்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலிலும் 3 ஆண்டுகளுக்கு மேல் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பணிமாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு பணிமாறுதல் வழங்கப்படவில்லை.
எப்போது வேண்டுமானாலும் பணிமாறுதல் வழங்கப்படலாம் என்ற நிலை உள்ளதால், பணி மாறுதலுக்கு விண்ணப்பித்த போலீசார் தங்களின் குழந்தைகளை இதுவரை பள்ளியில் சேர்க்காமல் உள்ளனர்.
எனவே, போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் பணிமறுதல் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.