/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தே.மு.தி.க., வேட்பாளர் அறிமுகம் நிகழ்ச்சி
/
தே.மு.தி.க., வேட்பாளர் அறிமுகம் நிகழ்ச்சி
ADDED : மார் 25, 2024 05:39 AM
அ.தி.மு.க., கூட்டணி கட்சியான தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் தன்னை அறிமுகப்படுத்தினார்.
மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க., கூட்டணி கட்சியின் கடலுார் லோக் சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை, அ.தி.மு.க., புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், பெண்ணாடம் நகரம், நல்லுார் தெற்கு, மேற்கு ஒன்றிய நிர்வாகிகளிடம் அறிமுகப்படுத்தினார்.
அப்போது, கூட்டணி கட்சியான தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை நம் வேட்பாளர் போன்று நினைத்து வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க., அரசின் அவலங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வெற்றி பெற நீங்கள் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

