/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முந்திரி தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
/
முந்திரி தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
முந்திரி தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
முந்திரி தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
ADDED : ஏப் 02, 2024 04:12 AM

கடலுார் : முந்திரி தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என, கடலுார் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து பேசினார்.
கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, பண்ருட்டி தெற்கு ஒன்றியம் பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, மேல்மாம்பட்டு, வேகாக்கொல்லை, முத்தாண்டிக்குப்பம், தோப்புக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா ஆசி பெற்று போட்டியிடுகிறேன். கடலுார் லோக்சபா தொகுதி மக்கள் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். எம்.எல்.ஏ., வாக இருந்து மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளேன். சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன். பண்ருட்டி பகுதி மக்கள் வாழ்வாதாரமான முந்திரி தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்' என்றார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பக்தரட்சகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர், மாவட்ட துணை செயலாளர் ஞானசெல்வி கல்யாணசுந்தரம், பண்ருட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் சிவமூர்த்தி, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் செல்வமணி, மாவட்ட துணை செயலாளர் ஜெய்சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர்
சிவமுருகன், மாவட்ட விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் அரிதாஸ், வர்த்தக அணி துணை செயலாளர் வேலு, மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், கணேஷ், ஆனந்தராமன், ராஜேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் மணிகண்டன், சத்தியராஜ், முருகன், சுரேஷ் உடனிருந்தனர்.

