/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஏப் 13, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். தலைவர் பாலு முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் லோக்சபா தேர்தலில் பணியாற்றுவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மாவட்ட பொருளாளர் ராஜ், துணைச் செயலாளர் வேல்முருகன், ராஜவன்னியன், தலைவர் சங்கர், பொருளாளர் கருணா, ஒன்றிய செயலாளர் செம்பை, ஜெயக்குமார், தனசேகர், முத்து, பாலா மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

