ADDED : மார் 15, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி நகர தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், நகர அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் பரணிசந்தர் முன்னிலை வகித்தனர்.
தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்த், ஞானவேல், துணை ஒருங்கிணைப்பாளர் நாராயணன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத், மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளர் இலக்கியா, நகர தகவல் தொழில்நுட்ப அணி மோகன், சண்முகவள்ளி, சமூக ஊடக அணி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.