ADDED : செப் 02, 2024 01:08 AM

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் கடலுார் மேற்கு ஒன்றிய தி.மு.க.,செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேரகன், மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், மாவட்ட விவசாய அணித் தலைவர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் சாரங்கபாணி வரவேற்றார்.
கூட்டத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசுகையில், தி.மு.க., வினர் வீடு, வீடாக சென்று புதிய இளைஞர்கள், மகளிரணி உறுப்பினர்களை அதிகமாக சேர்க்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற உழைக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் விக்ரமன், ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேந்திரன், சிவபெருமாள், ஜோதி, நெசவாளர் அணி பன்னீர்செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் சுதாகர், ராஜாராம், நடுவீரப்பட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் ,விவசாய தொழிலாளர் அணி பாண்டுரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.