/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் தி.மு.க., நாஞ்சில் சம்பத் பேச்சு
/
பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் தி.மு.க., நாஞ்சில் சம்பத் பேச்சு
பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் தி.மு.க., நாஞ்சில் சம்பத் பேச்சு
பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் தி.மு.க., நாஞ்சில் சம்பத் பேச்சு
ADDED : ஏப் 13, 2024 05:08 AM
கடலுார்: 'பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டிய யுத்தம் தான் நடைபெற உள்ள தேர்தல்' என தி.மு.க., பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
கடலுார் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து, கடலுார் தலைமை தபால் நிலையம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
நாட்டை கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளையடித்த பா.ஜ., மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முயற்சிக்கிறது. புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு, ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு இல்லை.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 19 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தி.மு.க.,வை தனிமைப்படுத்த பிரதமர் மோடி முயற்சிப்பது நடக்காது.
பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கூறுகிறார். இது நாடகம். பழனிசாமி பா.ஜ., வின் கைக்கூலியாக செயல்படுகிறார்.
இந்தியாவை காக்க பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டிய யுத்தம் தான் நடைபெற உள்ள தேர்தல். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் குளோப், காங்., மாநகரத் தலைவர் வேலுசாமி, பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

