/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., கட்சியை ஒழிக்க துவக்கப்பட்டது தி.மு.க.,: விருத்தாசலத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
/
காங்., கட்சியை ஒழிக்க துவக்கப்பட்டது தி.மு.க.,: விருத்தாசலத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
காங்., கட்சியை ஒழிக்க துவக்கப்பட்டது தி.மு.க.,: விருத்தாசலத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
காங்., கட்சியை ஒழிக்க துவக்கப்பட்டது தி.மு.க.,: விருத்தாசலத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு
ADDED : மார் 30, 2024 07:03 AM

விருத்தாசலம் : 'காங்., கட்சியை இந்தியாவில் இருந்து அகற்றவே, அண்ணாதுரை தி.மு.க.,வை துவங்கினார்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
விருத்தாசலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த கடலுார் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து, அவர் பேசியதாவது;
உலகமே பார்த்து அதிசயிக்கும் மனிதர் பிரதமர் மோடி. மூன்றாவது முறையாக மோடி பிரமராக பொறுப்பேற்க உள்ளார். இந்த கூட்டணி நல்ல கூட்டணி, நாணய கூட்டணி, நம்பிக்கை கூட்டணி. வேட்பாளர் தங்கர்பச்சான் எளிமையானவர், ஏழ்மையானவர். இந்த மண்ணின் மைந்தர்.
காங்., கட்சி அகற்றபட வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணதுரை தி.மு.க.,வை துவக்கினார். இந்த தொகுதியில் சென்ற முறை நின்று வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் என்ன செய்தார் என்று உங்களுக்கு தெரியும்.
நான் இல்லை என்றால் கடலுார் தி.மு.க., எம்.பி., செய்த கொலையை மூடி மறைத்திருப்பர்.
நமது கட்சியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.பி., பதவியில் அமர்ந்த ஒருவர் மூன்றாவது முறையும் என்னிடம் சீட் கேட்டார். ஆனால், அதற்கு நான் அந்த தொகுதியில் உள்ள நம் கட்சிகாரர்களிடம் சென்று விருப்ப கடிதம் வாங்கி வரச் சொன்னேன்.
அதனால் அவர் வேறு கட்சிக்கு சென்று தற்போது காணாமல் போய்விட்டார்.
ஒரு வேட்பாளர் அங்கு வாழும் மக்களை பற்றி தெரிந்திருக்க வேண்டும். நம் வேட்பாளர் இந்த மாவட்டத்தின் வளர்ச்சி பற்றி மிக துல்லியமாக திட்டமிட்டு செய்வார். வேட்பாளர் தங்கர்பச்சானின் பணி மக்களை சார்ந்து இருக்கும். நமது வேட்பாளர் வந்தார், வென்றார், சென்றார் என்று இருக்க மாட்டார்.
இந்த மண் வாசனையை பற்றி தங்கர்பச்சானை தவிர தற்போது போட்டியிடும் வேட்பாளர் யாருக்கு தெரியும். மக்களின் பிரச்னைகள் தீர தங்கர்பச்சனை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர், பேசினார்.

