
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த மஞ்சக்கொல்லையில் இறந்த சமூக ஆர்வலரின் விருப்பத்திற்கேற்ப அவரது கண்களை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையினர் கண்களை தானமாக பெற்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபை,70; சமூக ஆர்வலர். கனகசபை நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு அவர் தனது கண்களை தானம் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து கனகசபையின் கண்களை தானம் பெற்றனர்.