/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எங்களை கண்டுக்கலையே... த.மு.மு.க., வினர் விரக்தி
/
எங்களை கண்டுக்கலையே... த.மு.மு.க., வினர் விரக்தி
ADDED : ஏப் 01, 2024 05:20 AM
நெல்லிக்குப்பம், : தி.மு.க., கூட்டணியில் உள்ள த.மு.மு.க., நிர்வாகிகளை, காங்., வேட்பாளர் கண்டுகொள்ளவில்லை என விரக்தியில் புலம்பி வருகின்றனர்.
கடலுார் தொகுதியில் போட்டியிடம் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
ஆனால், இதுவரை தி.மு.க., கூட்டணியில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கவில்லை. இதனால், நெல்லிக்குப்பம், விருத்தாசலம், திட்டக்குடி உட்பட பல ஊர்களில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டங்களில் த.மு.மு.க.,வினர் புறக்கணித்தனர்.
இதுகுறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'கடலுார் தொகுதியில் எங்கள் கட்சிகளுக்கு அதிக ஓட்டுகள் உள்ளன. ஆனால் வேட்பாளர் எங்களிடம் இதுவரை ஆதரவு கேட்கவில்லை' என விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.

