ADDED : மார் 10, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி அருகே டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் புதிய காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் அண்ணாமலை,48; டிரைவர்; கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்திரவின்படி புதிய காலனியில் இருந்த முருகேசன் வீடு அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட இடத்தில் குடிசை போட்டு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணாமலை நேற்று பகல் 12:30 மணியளவில் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணாமலை எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.