ADDED : ஜூன் 28, 2024 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரி மற்றும் மக்கள் நல மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் மனித சங்கிலி நடந்தது.
கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் விஜயகுமார், கல்லுாரி முதல்வர் நிர்மலா, நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினர். மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா சிறப்புரையாற்றினார்.
இதில், போதைப்பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, எடுத்துரைக்கப்பட்டது.
மாணவியர் மனித சங்கிலியில் ஈடுபட்டு, உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக, மக்கள் நல மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குநர் ஜெயக்கொடி வரவேற்றார்.
வேதியியல் துறைத்தலைவர் ேஹமலதா நன்றி கூறினார்.