/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 11, 2025 06:13 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில், மாவட்ட மதுவிலக்கு துறை, வருவாய்த்துறை, சுகாதார துறை, தீயணைப்புத்துறை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கடலுார் கலால் உதவி ஆணையர் சந்திரகுமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தவ அமுதம் மெட்ரிக் பள்ளி, த.வீ.செ. மேல்நிலைப்பள்ளி, ஜெ.பி. பாரா மெடிக்கல் கல்லுாரி மாணவ மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினர்.
சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர் ஜெயசெல்வி, தாசில்தார் சேகர், கலால் ஆய்வாளர் கமல்ராஜ், ஸ்ரீமுஷ்ணம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஐஸ்வர்யா, சுகாதார ஆய்வாளர் அன்பரசன், ரோட்டரி கிளப் தலைவர் ரவிசுந்தர், செயலாளர் குருராஜன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.