/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலி மருந்துகளை கண்டறிய ஆய்வகம் மருந்து வணிகர் சங்கம் கோரிக்கை
/
போலி மருந்துகளை கண்டறிய ஆய்வகம் மருந்து வணிகர் சங்கம் கோரிக்கை
போலி மருந்துகளை கண்டறிய ஆய்வகம் மருந்து வணிகர் சங்கம் கோரிக்கை
போலி மருந்துகளை கண்டறிய ஆய்வகம் மருந்து வணிகர் சங்கம் கோரிக்கை
ADDED : ஆக 18, 2024 11:34 PM

மந்தாரக்குப்பம்: மாவட்ட மருந்து வணிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் விருத்தாச்சலம் ஏ.ஆர்.எஸ்., மஹாலில் நடந்தது
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மருந்து வணிகர் தொண்டு அறக்கட்டளை சேர்மன் முருகேசன், மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் பாபு வரவேற்றார். பொதுக்குழுக் கூட்டத்தில் மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி., வரியை நீக்கிட வலியுறுத்தியும், ஒ.டி.சி., மருந்துகளை வகைப்படுத்தி அறிவிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் வணிகர்களின் பிரிதிநிதியாக அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் சேர்க்கப்பட வேண்டும்.
விற்பனைக்கு வரும் அனைத்து தயாரிப்புகளும் மருந்துகள் தயாரிப்புக்கான உரிமம் பெற்றே தயாரிக்கப்பட வேண்டும்.மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும்,ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வது முற்றிலும் தவிர்க்க வேண்டும், போலி மருந்துகள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட தோறும் ஆய்வகங்கள் ஏற்படுத்தி பொதுமக்கள் தாங்கள் வாங்கி உபயோகிக்கும் மருந்துகள் தரத்தினை அறிய வசதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் குருமூர்த்தி, திருமலை ராஜேந்திரன், ரமேஷ், குப்தா, சண்முகசுந்தரம், பிரகாஷ்ராஜ், கொளஞ்சியப்பன், பாணடியன் உட்பட பலர் பங்கேற்றனர்

