ADDED : ஆக 29, 2024 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் டி.எஸ்.பி.,யாக அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் நேற்று பொறுப்பேற்றார்.
சிதம்பரம் ஏ.எஸ்.பி.,யாக இருந்த ரகுபதி, பதவி உயர்வு பெற்று சென்றார். அதையடுத்து, சிதம்பரம் டி.எஸ்.பி.,யாக அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு சீர்காழி டி.எஸ்,பி., யாக பணியாற்றினார்.
புதிய டி.எஸ்.பி.,க்கு, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.