/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டி.எஸ்.பி., டிரான்ஸ்பரின் 'ரகசியம்' போட்டியாளர்கள் 'ஷாக்'
/
டி.எஸ்.பி., டிரான்ஸ்பரின் 'ரகசியம்' போட்டியாளர்கள் 'ஷாக்'
டி.எஸ்.பி., டிரான்ஸ்பரின் 'ரகசியம்' போட்டியாளர்கள் 'ஷாக்'
டி.எஸ்.பி., டிரான்ஸ்பரின் 'ரகசியம்' போட்டியாளர்கள் 'ஷாக்'
ADDED : ஆக 21, 2024 07:40 AM
சிதம்பரம் போலீஸ் உட்கோட்ட அதிகாரியாக இருந்த ஏ.எஸ்.பி., ரகுபதி, பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டார்.
அதையடுத்து, அந்த இடத்தை பிடிக்க, ஏற்கனவே சிதம்பரத்தில் பழம் திண்ணு கொட்டை போட்ட நான்கு போலீஸ் அதிகாரிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட கலால் டி.எஸ்.பி., லாமேக், ராணிப்பேட்டை டி.எஸ்.பி., கார்த்திகேயன், வேலுார் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், விருத்தாசலம் ஆரோக்கியராஜ் பந்தய களத்தில் இருந்தனர்.
சிறிது காலம் சிதம்பரம் பொறுப்பு அதிகாரியாக இருந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமாருக்கும், சிதம்பரம் மீது ஆசை ஏற்பட்டு, பந்தயத்தில் ஒட்டிக்கொண்டார்.
சிதம்பரத்தை பிடித்தே தீர வேண்டும் என, ஐந்து பேரும் அரசியல் செல்வாக்கு, காவல் துறை அதிகாரிகளின் செல்வாக்கு என காய் நகர்த்தினர். ஆனால், என்னவோ, லாமேக்கிற்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. அவர் சிதம்பரத்தை பிடித்த ரகசியம், பிற போட்டியாளர்களுக்கு ஷாக்கை கொடுத்தது.
சீர்காழி டி.எஸ்.பி.,யாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாமேக் பணியாற்றியபோது, திருவெண்காடு பெரிய இடத்தின் தொடர்பு கிடைத்ததாகவும், அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி, சிதம்பரத்தை பிடித்துவிட்டதாகவும் தகவல் கசிந்து வருகிறது.
அதையடுத்து, போட்டியில் இருந்த அதிகாரிகள் கூட, டி.எஸ்.பி., லாமேக்கை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

