ADDED : ஜூலை 16, 2024 11:36 PM
திட்டக்குடி, : திட்டக்குடியில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
இதுகுறிதது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திட்டக்குடி கோட்ட செயற்பொறியாளர் கரிகால்சோழன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திட்டக்குடி மெயின்ரோடு, தர்மகுடிகாட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (18ம் தேதி) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 வரையில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
திட்டக்குடி, பெண்ணாடம், தொழுதுார், வேப்பூர் உபகோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர், குறைகேட்பு கூட்டத்தில், துறை சம்பந்தமான குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் கூறி நிவர்த்தி பெறலாம். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வியாழக்கிழமை மேற்பார்வை பொறியாளரின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.