/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை
/
பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை
ADDED : செப் 14, 2024 07:23 AM
விருத்தாசலம்: தீராத வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மங்கலம்பேட்டை அடுத்த கோ.பவழங்குடி, தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன், 84. இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சுப்ரமணியன் வீட்டிலிருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.