நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், :: விருத்தாசலம் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை மேற்கு தெருவை சேர்ந்தவர் சின்னதுரை, 60; இவரது மனைவி செல்லக்கண்ணு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி இறந்த சோகத்தில் சின்னதுரை இருந்து வந்துள்ளார்.
கடந்த 21ம் தேதியன்று, வயல் வெளியில் பலா மரத்தில், வேட்டியால் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

