நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை,: பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழியை சேர்ந்தவர் சற்குருநாதன், 75; இவருக்கு, அடிக்கடி வயிற்று வலி இருந்துள்ளது. மருத்துவமனையில் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த இவர், கடந்த 11ம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடன், அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, சற்குருநாதன் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.