/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செலவுகளை தீவிரமாக கண்காணிக்க தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல்
/
செலவுகளை தீவிரமாக கண்காணிக்க தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல்
செலவுகளை தீவிரமாக கண்காணிக்க தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல்
செலவுகளை தீவிரமாக கண்காணிக்க தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல்
ADDED : மார் 23, 2024 11:55 PM
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதி தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் பொது செலவின பார்வையாளராக நிதின் சந்த்நேகி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் துணை அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
தொகுதி துணை தேர்தல் நடத்தும் அலுவலர் ராஷ்மிராணி, தாசில்தார் ஹேமாஆனந்தி, நகராட்சி பொறியாளர் மகாராஜன் மற்றும் தேர்தல் ஆணையத்தால் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், செலவின பார்வையாளர் பேசுகையில், அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை, பறிமுதல் செய்ய வேண்டும். தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்' என்றார்.