/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகர விற்பனை குழு உறுப்பினருக்கான தேர்தல்
/
மாநகர விற்பனை குழு உறுப்பினருக்கான தேர்தல்
ADDED : செப் 01, 2024 06:50 AM

கடலுார் : கடலுார் மாநகராட்சியில், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் வியாபாரத்தை முறைப்படுத்தும் வகையில், மாநகர விற்பனைகுழு உறுப்பினருக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
கடலுார் மாநகரத்தில் 3200 க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்களுக்கு வாக்குச்சீட்டு முறைப்படிநேற்று தேர்தல் நடந்தது.
தேர்தல் அலுவலராக மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர் ராஜசேகரன் இருந்தார். மொத்தம் 6 உறுப்பினர்கள்தேர்ந்தெடுக்க வேண்டும்.
அவற்றில் பிற்படுத்தப்பட்டோர் உறுப்பினர் குளோப், சிறுபான்மையினர் உறுப்பினர் அப்துல் காதர் ஆகியஇருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பொது உறுப்பினர், மகளிர் உறுப்பினர், மாற்றுத்திறனாளி உறுப்பினர் ஆகியவற்றிக்கான தேர்தல் நடந்தது.
இதில் 4 உறுப்பினர்களுக்கு 9பேர் போட்டியிட்டனர். தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்திருந்தனர்.