/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தல் விதிகள் எதிரொலி நகை வியாபாரிகள் கவலை
/
தேர்தல் விதிகள் எதிரொலி நகை வியாபாரிகள் கவலை
ADDED : மார் 28, 2024 11:12 PM
கடலுார்: தேர்தல் அறிவிப்புக்கு பின் தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கடந்த மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நன்நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதையொட்டி பொதுமக்கள் 50 ஆயிரத்திற்குள் தான் பணத்தை எடுத்த செல்ல முடியும். அதற்கு மேல் எடுத்து சென்றால் ஆதாரம் காண்பிக்க வேண்டும்.
அதனால் பணத்தை வெளியே எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. புதிய உச்சமாக நேற்று ஒரு சவரன் 50 ஆயிரத்தை தொட்டது. இதுபோன்ற வரலாறு காணாத விலை ஏற்றத்திலும், பணத்தை எடுத்துச்செல்ல முடியாததாலும் நகைக்கடைகளில் கூட்டம் குறைவாக உள்ளது.
இதன் காரணமாக நகைக்கடைகளில் தங்கம் விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

