/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் கட்டண உயர்வு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
மின் கட்டண உயர்வு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மின் கட்டண உயர்வு கண்டித்து, விருத்தாசலத்தில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு கருப்பையன், வழக்கறிஞர் சந்திரசேகரன், ஒன்றிய அமைப்பாளர் வழக்கறிஞர் குமர குரு, சி.ஐ.டி.யூ., ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதில், ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தின் படி கடன்பெற கட்டண உயர்வு போன்ற நிபந்தனைகளை கைவிட வேண்டும்.
மின் வாரியத்தை பல கம்பெனிகளாக பிரித்து ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்தி தனியார் கொள்ளைக்கு வழிவிட கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

