ADDED : ஜூன் 20, 2024 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கடலுார் கேப்பர்மலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட சிறப்பு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் முருகானந்தம், ஷமிளா, ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனி வேல், மாவட்ட செயலாளர் தேசிங்கு கண்டனஉரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பன்னீர்செல்வம், கலியமூர்த்தி, ஆறுமுகம், கோவிந்தராசு, கண்ணன், தனசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். கணக்கீட்டு பிரிவில் காலிப் பணியிடங்களைநிரப்ப வேண்டும்.
மொபைல் ஆப் மூலமாககணக்கீட்டு பணி மேற்கொள்ள மொபைல் போன் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில்வலியுறுத்தப்பட்டது.