/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலைவாய்ப்பு முகாம் 120 பேருக்கு பணி ஆணை
/
வேலைவாய்ப்பு முகாம் 120 பேருக்கு பணி ஆணை
ADDED : மார் 03, 2025 07:36 AM

கடலுார் கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், அரசு பெரியார் கல்லுாரி, கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி, கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரி, எம்.ஆர்.கே., கல்லுாரி ஆகியவற்றில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு பயிலும் 862 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
18க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 120 மாணவர்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கு அரசு கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், அண்ணாமலை பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லுாரிகளுக்கு கல்லுாரி வளர்ச்சிக் குழு முதன்மையர் கோதைநாயகி, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்முருகன் ஆகியோர் பணி நியமன ஆணை வழங்கினர்.
ஏற்பாடுகளை நான் முதல்வன் குழுவினர், அரசு கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் சுசிகணேஷ்குமார் செய்திருந்தனர்.