ADDED : மே 17, 2024 11:01 PM

அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 24 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவிலில் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் நோக்கியா சொலியூஷன் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் தேஜா, மாணவர்களிடம் நேர்காணலை நடத்தினர். இதில், சி.எஸ்.சி., துறையில் இருந்து 24 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் கதிரவன் வாழ்த்து தெரிவித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன் உடனிடருந்தனர்.
