ADDED : ஜூன் 13, 2024 12:21 AM

கடலுார் :கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்-நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு நேர்காணல் நடந்தது.
கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை தாளாளர் இளங்கோ தலைமை தாங்கினார்.
செயலர் விஜயகுமார், முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், நான் முதல்வன் திட்டத்தின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக அதிகாரிகள் ஆதர்ஷ் மிட்ரல், தாமோதரன் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், தமிழகத்தை சேர்ந்த 20 தொழில்துறை நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பொறியியல் மாணவர்களை தேர்வு செய்தனர். முகாமில், 121 கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் 210 உட்பட பல்வேறு பொறியியல் கல்லுாரி மாணவர்களும் சேர்ந்து, 331 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பயிற்சி துறை அலுவலர்கள் தணிகைவேல், கார்த்திகா மற்றும் நான் முதல்வன் திட்ட உதவி பேராசிரியர்கள் செண்பகவள்ளி, பெரியஅழகர் செய்திருந்தனர்.