/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் 2ம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
/
பண்ருட்டியில் 2ம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : மார் 05, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டியில் நேற்று இரண்டாம் நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
கடலுார் நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. இரண்டாம் நாளாக நேற்று, கடலுார் சாலையில் திருவதிகை எம்.ஜி.ஆர்.சிலை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
நகராட்சி கட்டட ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் தானாக முன்வந்து அகற்றினர். இதனால், கடலுார் சாலை விசாலமாக காணப்பட்டது.