/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருமணம் நிச்சயித்த பெண் டிராக்டரில் சிக்கி பலி
/
திருமணம் நிச்சயித்த பெண் டிராக்டரில் சிக்கி பலி
ADDED : ஏப் 19, 2024 05:26 AM
செஞ்சி : திருமணம் நிச்சயித்தவருடன் சென்ற பெண், டிராக்டரில் சிக்கி இறந்தார்.
செஞ்சி அடுத்த சே.பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகள் காயத்ரி, 22; இவருக்கும் இசக்கை கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் பாலமுருகன்,26; என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஒரு சில வாரங்களில் திருமணம் நடைபெற இருந்தது.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் பாலமுருகன், காயத்ரி இருவரும் பேஷன் புரோ பைக்கில் நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் இருந்து சே.பேட்டைக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. அதில், பைக் பின்னால் அமர்ந்து சென்ற காயத்ரி நிலை தடுமாறி கீழே விழுந்து, டிராக்டர் டிப்ப ரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் நல்லன்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

