/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இயந்திரம் பழுது: தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு
/
இயந்திரம் பழுது: தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 20, 2024 06:20 AM

சிதம்பரம் : சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் வாக்கு இயந்திரம் பழுதானதால் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கப்பட்டது.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் பல இடங்களில் பழுதானது, அதில் சிதம்பரம் மானாசந்து நகராட்சி பள்ளி வாக்குச்சாவடி, அம்பலத்தாடி மடத்தெருவில் நகராட்சி துவக்க பள்ளியில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் காலை வாக்குப்பதிவு துவங்கும்போதே வாக்கு இயந்திரம் பழுதானது. இதனால் 45 நிமிடத்திற்கு பின்பே வாக்குப்பதிவு துவங்கியது.
இதனால் காலையில் வாக்களிக்க வந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்து வாக்களித்து சென்றனர்.
புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் பூத் நம்பர் 256, 257 இரண்டு பூத்துகளிலும் சர்வர் பிரச்சனை காரணமாக காலை 7:00 மணி முதல் 7 45 மணி வரை ஓட்டு பதிவு நடைபெறவில்லை. பின்பு, சர்வர் சீரமைக்கப்பட்டு 7.45 மணி முதல் வாக்கு பதிவு துவங்கியது.
அதேபோல் காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்குபாளையம், மற்றும் ஆனந்தங்குடியில் அமைந்துள்ள ஓட்டுப்பதிவு மையத்தில் இயந்திரம், மதியநேரத்திற்கு பின்பு திடீரென பழுதானதை தொடர்ந்து சுமார் 30 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின் சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு துவங்கியது.

