ADDED : மார் 03, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : சிப்காட் தனியார் தொழிற்சாலையில் அமிலம் கொட்டியதில் இன்ஜினியர் இறந்தார்.
புதுச்சேரி, பாகூர் அடுத்த கும்தாமேட்டைச் சேர்ந்தவர் புருேஷாத்தமன்,32; திருமணமானவர். கடலுார் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் கெமிக்கல் இன்ஜினியரிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார்.
கடந்த 1ம் தேதி பணியில் இருந்த போது, கெமிக்கல் பிளாண்ட்டில் அமிலம் வால்வில் பழுது ஏற்பட்டதை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அமிலம் திடீரென அவரது முகம், கழுத்து, கைகளில் கொட்டியது.
இதில், பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.