ADDED : ஜூன் 06, 2024 02:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் சிப்காட் பயோனியர் ஜெல்லைஸ் நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
நிறுவன முதுநிலை துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஒளிசந்திரன் சுற்றுச்சூழல் தினம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில், உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்று, தொழிற்சாலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.
அப்போது, ரத்தினராஜ், பிரபாகரன், முரளி, விஜயகுமார், விக்னேஷ் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.