/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இ.எஸ்.ஐ., சான்று வழங்காததால் துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
/
இ.எஸ்.ஐ., சான்று வழங்காததால் துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
இ.எஸ்.ஐ., சான்று வழங்காததால் துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
இ.எஸ்.ஐ., சான்று வழங்காததால் துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
ADDED : மே 22, 2024 11:12 PM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீடு சான்று வழங்காததால், சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம், குப்பை அகற்றும் பணியை செய்ய தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் 50 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் மூலம் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணி செய்கிறார். அவர்களுக்கு, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் வெறும் கையுடன் குப்பையை எடுப்பது, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்வதால் நோய் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், துாய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி, பல போராட்டங்களுக்கு பிறகு, நகராட்சி சார்பில் தற்போது செலுத்தப்பட்டது. ஆனால், தொழிலாளர்கள் மருத்துவ வசதிக்காக இ.எஸ்.ஐ., காப்பீடுக்காக பணம் பிடிக்கின்றனர்.
இதுவரை அதற்கான சான்றுகளை பணியாளர்களுக்கு வழங்கவில்லை. இதனால், துாய்மை பணியாளர்கள், இ.எஸ்.ஐ., மூலம் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் ஒப்பந்த தொழிலாளர் நகராட்சி வாகனம் மோதி காயமடைந்தார்.
இ.எஸ்.ஐ., சான்று இல்லாததால் தனது சொந்த செலவில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது. எனவே, தூய்மை பணியாளர் நலன்கருதி உடனடியாக இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீடு சான்று வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

