/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காலாவதி பொருட்கள் விற்பனை ஜோர்; வேப்பூரில் அதிகாரிகள் ஆய்வு தேவை
/
காலாவதி பொருட்கள் விற்பனை ஜோர்; வேப்பூரில் அதிகாரிகள் ஆய்வு தேவை
காலாவதி பொருட்கள் விற்பனை ஜோர்; வேப்பூரில் அதிகாரிகள் ஆய்வு தேவை
காலாவதி பொருட்கள் விற்பனை ஜோர்; வேப்பூரில் அதிகாரிகள் ஆய்வு தேவை
ADDED : ஆக 06, 2024 06:57 AM
வேப்பூர்: வேப்பூரில் ஓட்டல், பேக்கரிகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனையை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை - திருச்சி, கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையுமிடத்தில் வேப்பூர் அமைந்துள்ளது. இவ்வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்கு வந்து செல்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், இங்குள்ள ஓட்டல்களில் நிறுத்தி சாப்பிட்டு செல்கின்றனர். அதுபோல், கிராம மக்கள் பேக்கரிகளில் இருந்து குழந்தைகளுக்கு தேவையான திண்பண்டங்கள், குளிர்பானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இங்குள்ள பெரும்பாலான உணகவங்களில் காலாவதியான ஸ்வீட், ரொட்டி, குளிர்பானங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. பொருட்கள் மீது காலாவதி தேதி, உற்பத்தி இடம் குறித்த எந்த விபரங்களும் அச்சிடப்படுவது இல்லை. இதனால், காலாவதி பொருட்களால் பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே, வேப்பூர் பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கம் எதிர்பார்க்கின்றனர்.