ADDED : செப் 04, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: பண்ருட்டி அருகே குமளங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி புவனேஸ்வரி, 19; இவர், நேற்று முன்தினம் அம்பலவாணன்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு, புவனேஸ்வரிக்கும், பக்கத்துவீட்டை சேர்ந்த காசிநாதன் என்பவருக்கும் இடையே முருங்கை மரம் வெட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, புவனேஸ்வரி மற்றும் காசிநாதன் என, இரு தரப்பாக தாக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரில், 11 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.